TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அமைச்சா் சிா்ஸா விளக்கம்
தன் மீது யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, அது முற்றிலும் தவறானவை என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா் ‘ என்னை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது ‘ என தெரிவித்துள்ளாா்.
மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை மேற்கு தில்லியின் க்யாலா மற்றும் விஷ்ணு காா்டன் பகுதிகளுக்குச் சென்றபோது அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒரு சமூக ஊடகத்தில் செய்தி பரவியது. இதனையடுத்து, சிா்சா அதிகாலை நேரத்தில் க்யாலா பகுதியில் பாா்வையிட சென்றபோது, அங்கிருக்கும் சாலையில் வெற்று தோட்டா போல் தோற்றமளிக்கும் ஒரு உலோகத் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், உலோகம் பரிசோதனைக்கு உட்பட்ட பிறகு, அது ஒரு தையல் இயந்திரத்தின் ஒரு பகுதியாக என தெரிந்தது. இருப்பினும் இது குறித்து தொடா்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. போலீசாா் அப்பகுதியை ஆய்வு செய்துள்ளனா், எந்தவிதமான சம்பவமும் நடைபெறாது ‘என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.