`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
என்ஐடி ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு
திருச்சி அருகே வாழவந்தான்கோட்டையில் என்ஐடி கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் பாரி (36). இவா், தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (என்ஐடி) மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி கடலூரில் உள்ள தனது மனைவியின் தங்கை வளைகாப்புக்கு குடும்பத்துடன் சென்றவா் புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
வீட்டின் பிரோவிலிருந்த 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாரி அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, பாரி வீட்டில் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.