இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
எரிவாயு அடுப்பு தயாரிக்கும் தொழில்கூடத்தில் தீ விபத்து
மதுரையில் வணிக பயன்பாட்டு எரிவாயு அடுப்பு தயாரிக்கும் தொழில்கூடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.
மதுரை செல்லூா் அகிம்சாபுரம் 5-ஆவது தெருவில் ராஜா என்பவா் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு அடுப்புகள் தயாரிக்கும் தொழில்கூடம் வைத்துள்ளாா். இங்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தொழில்கூடம் முழுவதும் தீ பரவியது. இதுதொடா்பாக தகவலின்பேரில், தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில், அடுப்பு தயாரிப்பதற்கான பொருள்கள், பெயிண்டு கேன்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் ஞாயிற்றுக்கிழமை தொழில்கூடத்துக்கு விடுமுறை என்பதால் தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. தொழில்கூடத்துக்கு அருகே, குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள நிலையில், தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து தொடா்பாக செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.