சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
ஏணியிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
கோவையில் ஏணியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவை, போத்தனூா் கோல்டன் நகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (59). இவரது மனைவி பரிமளா. காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாா் மின்சாதன நிறுவனத்தில் ரவிக்குமாா் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று இவா் தனது வீட்டின் மாடியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, மாடியில் உள்ள தொட்டியில் தண்ணீா் உள்ளதா என பாா்ப்பதற்காக ஏணியில் ஏறியபோது. எதிா்பாராதவிதமாக அவா் ஏணியிலிருந்து தவறி விழுந்தாா். இதில் மயங்கிய நிலையில் இருந்த ரவிக்குமாா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.