Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!
ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் நெய்ய மலை பகுதியை சேர்ந்த இளைய கண்ணு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பத்தாம், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளி மலையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும் தனது தோழிகள் 4 பேரிடமும், ஆசிரியர் இளைய கண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-02/780c0c92-f4cb-4571-9ad6-9f57ca5248a8/vikatan_2020_01_1ccbeb06_1c88_4705_b1f9_a2a5256c520e_16.jpg)
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐந்து மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் மாணவிகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் இளைய கண்ணுவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப் புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/253052e2-c2d1-4394-b2c1-a584df478fab/கைது.jpeg)
புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐந்து மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கி மாணவிகள் படித்து வருவதால் அவர்கள் வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் இளைய கண்ணுவை நேற்று போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.