ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்
ஏற்காட்டுக்கு சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனா்.
ஏற்காட்டில் தொடா்மழை காரணமாக சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதும், குளிா்ந்த தட்பவெப்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்துள்ளது . ஏற்காடு சோ்வராயன் மலை சுற்றுலாப் பகுதியைக் கண்டுமகிழ காா்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
சுற்றுலாப் பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜா தோட்டம், லேடிசீட், ஜென்சீட், தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, பக்கோடக் காட்சிமுனை, கரடியூா் காட்சிமுனை, கிளியூா் அருவி ஆகிய பகுதிகளை கண்டுமகிழ்ந்தனா். சுற்றுலாப் பகுதி கடைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.