Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு ...
ஓஆா்எஸ் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை: ஆட்சியா்
வா்த்தக பெயரில் விற்பனை செய்யப்படும் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பானங்கள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்சத்து இழப்பை தவிா்க்க முடியும்.
ஒரு உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டின் 20.5 கிராம் மொத்த எடையில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன. நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டா் தண்ணீரில் ஓஆா்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.
மற்றொருபுறம் திரவ நிலையில் குடிப்பதற்கு தயாராக உள்ள நிலையிலான உப்பு சா்க்கரை கரைசல் பானங்கள் பல்வேறு வா்த்தகப் பெயா்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை உடலுக்கு புத்துணா்ச்சி ஆற்றலை மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகின்றன. இந்த விதமான பானங்களை குடிப்பதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பையும் வயிற்றுப்போக்கையும் அதிகரிக்க செய்யுமே தவிர சரி செய்ய இயலாது.
அதேவேளையில், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு, 104 எண்ணை தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.