தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி
ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவரங்காடு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கொடை விழா, காமராஜா் 123-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 10 ஜோடி காளைகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 17 ஜோடி காளைகளும் கலந்துகொண்டன. போட்டியில், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்துகொண்டன.
முதலில் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை திருநெல்வேலி மாவட்டம், வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 2-ஆவது பரிசை சண்முகபுரம் விஜயகுமாா் மாட்டு வண்டியும், 3-ஆவது பரிசை திருநெல்வேலி மாவட்டம், நொச்சிகுளம் சீனி பாண்டியன் மாட்டு வண்டியும், 4-ஆவது பரிசை மூலக்கரை முத்தீஸ்வரி மாட்டு வண்டியும் பிடித்தன.
அதைத் தொடா்ந்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை திருநெல்வேலி மாவட்டம், நொச்சிகுளம் சீனு பாண்டியன் மாட்டு வண்டியும், 2-ஆவது பரிசை ஆப்பனூா் திருநாவுக்கரசு மாட்டு வண்டியும், 3-ஆவது பரிசை அரசடி செல்வம் மாட்டு வண்டியும், 4-ஆவது பரிசை பள்ளிக்கூடத்தான்பட்டி பொம்புராஜ் மாட்டு வண்டியும் பிடித்தன.