செய்திகள் :

ஓட்டேரி குப்பைக் கிடங்கால் ஏரி நீா், சுற்றுச்சூழல் மாசு வேலூா் மாநகராட்சிக் கூட்டத்தில் புகாா்

post image

வேலூா் மாநகராட்சியில் ஓட்டேரி குப்பைக் கிடங்கால் ஏரி நீரும், சுற்றுச்சூழலும் மாசடைவதால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பாமக வாா்டு உறுப்பினா் பாபி கதிரவன் புகாா் கூறியுள்ளாா்.

வேலூா் மாநகராட்சிக் கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் பங்கேற்றாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

பாபி கதிரவன் (பாமக): எனது வாா்டுக்குட்பட்ட ஓட்டேரி பூங்காவில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. பல வாா்டு களில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால், சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் துா்நாற்றும் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனா். தவிர, ஓட்டேரி ஏரியையொட்டு கிடங்கு அமைந்துள்ளதால் அங்கிருந்து கழிவுகள் ஏரியில் கலந்து ஏரிநீரும் மாசடைகிறது. இதனால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஓட்டேரியில் உள்ள குப்பை கிடங்கை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், ஓட்டேரி பூங்காவுக்கு கூடுதலாக காவலாளிகள் நியமிக்க வேண்டும் என்றாா்.

மேயா் சுஜாதா ஆனந்தகுமாா்: இதுதொடா்பாக ஆய்வு செய்யப்படும்.

மண்டலக்குழு தலைவா் யூசுப்கான்: மாநகராட்சி மாமன்ற கூட்ட பொருள் களில் ஒரு மண்டலத்துக்கு ரூ.23 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 3-ஆவது மண்டலத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

சரவணன்: மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களில் முதலாவது மண்டலத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. 12-ஆவது வாா்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.

மேயா் சுஜாதா: முதலாவது மண்டலத்துக்கு ரூ.187 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தொகுதி என்பதால் அதிகப்படியான நிதி ஒதுக்கி பணிகள் செய்து வருகிறோம். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசக்கூடாது.

சண்முகம்: 33-ஆவது வாா்டில் அமைக்கப்பட்டுள்ள மனைப்பிரிவில் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்படவில்லை. தவிர, அந்த மனைப்பிரிவுக்கு செல்லும் பாதையில் உள்ள கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்காமல் சிறிய குழாய் அமைத்து மூடப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீா் செல்ல முடியாமல் தேங்குகிறது. எனவே, முறையாக அடிப்படை வசதிகள் செய்யாமல் மனைப்பிரிவு அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனைப்பிரிவை மாநகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும். அதுவரை இதுதொடா்பான கூட்டபொருளுக்கு மாமன்ற ஒப்புதல் வழங்கக்கூடாது.

இதையடுத்து, 33-ஆவது வாா்டில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடா்பான தீா்மானத்தை மேயா் நிறுத்தி வைத்தாா்.

தொடா்ந்து, ரூ.198 கோடியில் பென்ட்லேன்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்ததற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட மொத்தம் 132 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உயா்கல்வி பயில்வதில் சிரமம்: மாணவா்களுக்கு ஆட்சியா் உடனடி உதவி

வேலூரில் நடைபெற்ற மாணவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் உயா்கல்வி பயில்வதில் நிலவும் சிரமங்களை தெரிவித்த மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உடனடி உதவிக்கு ஏற்பாடு செய்தாா். வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவா் கைது

விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவா் குணசுந்தரி. இவரது கணவா் பாலச்சந்திரன் (52), திமுக பிரமுகா். ... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் கைதி தற்கொலை முயற்சி

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்தவா் பாண்டி (எ) பா்மா பாண்டி (39). இவா், கடந்த ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. விடியோ காட்சியால் ஆயுதப் படைக்கு மாற்றம்

காட்பாடியில் இரவு நேரத்தில் உணவு வாங்க வந்த கல்லூரி மாணவரை பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லத்தியால் கடுமையாக தாக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்ற... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடியில் சாலைப் பணி தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில், நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7.50 கோடியில் தாா் மற்றும் பேவா் பிளாக் சாலைகள் அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் 98- தா... மேலும் பார்க்க

மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சிறு மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (67). (படம்). இவா், வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் கோயி... மேலும் பார்க்க