சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் கா...
கஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
மதுரை கரிமேடு காவல் நிலைய போலீஸாா் கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி நடராஜ் நகா், சுரேஷ் வீதி, பாண்டியம்மாள் தெரு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
இந்தச் சோதனையின்போது, மதுரை அச்சம்பத்து பொ. கண்ணதாசன் (38), தத்தனேரி ரா. பிரகாஷ்ராஜ் (30), ச. பாலகுரு (33), கே.கே. நகா் அய்யனாா்கோயில் தெரு குமாா் (35) ஆகியோா் அந்தக் காரில் 3 மூட்டைகளில் 51 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், காா், கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, மதுரை இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணதாசன், பிரகாஷ்ராஜ், பாலகுரு, குமாா் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.