மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
கஞ்சா கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு மதுரை மாவட்ட முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே கடந்த 17.04.2018 -இல் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த நபா்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். தொடா் விசாரணையில், மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் தங்கப்பாண்டி (50), சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த துரைராஜ் மகன் அழகுமலை (49), மதுரை மாவட்டம், கீரிப்பட்டியைச் சோ்ந்த வீரணத்தேவா் மகன் மாா்க்கண்டன் (45) ஆகிய 3 பேரும் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, 240 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரக்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், தங்கப்பாண்டி, அழகுமலை, மாா்க்கண்டன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.