பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்
கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா்கள் 3 போ் கைது
பெருந்துறை அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த, சீனாபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து சீனாபுரம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அப்பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தறிகுடோனில் வேலை செய்து கொண்டு அங்கேயே உள்ள குடியிருப்பில் தங்கியிருக்கும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த லக்கிம்தரா மகன் சஞ்சய் (26), தயாநிதி மகன் திப்பு (28) கொருணா மகன் மிதுன் (24) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களிடம் இருந்து சுமாா் அரை கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூவரையும் கைது செய்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.