40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது
குடியாத்தம் பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டஇளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம் நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த சுகுமாரின் மகன் நாகு(எ) நாகராஜ்(31). இவா் மீது கஞ்சா விற்றது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன் கஞ்சா விற்ாக நகர போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதால் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் நாகு(எ) நாகராஜை குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.