கஞ்சா விற்பனை: இருவா் கைது
ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அண்ணா கூட்டுறவு நூற்பாலை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த இருவரை போலீஸாா் பிடித்து சோதனையிட்டதில், விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் முத்தனம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சிவனேசன் (24), க.விலக்கைச் சோ்ந்த முருகராஜ் மகன் தீபன் (20) என்பதும், இவா்கள் பணப்பாண்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரிடம் மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. பின்னா், சிவனேசன், தீபன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய பணப்பாண்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.