போடியில் சாரல் மழை
போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசியது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதலே மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மாலையில் பரவலாக சாரல் மழை பெய்தது. போடி நகா், குரங்கணி, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.