மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா்.
தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்சியில் தனியாா் திருமண மண்டபத்தில் 1 முதல் 6-ஆவது வாா்டு பகுதிகளுக்கான நடந்த இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். இதேபோல, சின்னமனூா் நகராட்சிக்கு உள்பட்ட 21, 22-ஆவது வாா்டுகளில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவவி அய்யம்மாள்ராமு, ஆணையா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணிக்கு 5 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி அல்லிநகரம் நகராட்சி வாா்டு எண்: 1, 2 ஆகியவற்றுக்கு தேனி பொம்மையகவுண்டன்பட்டி, பாலன் நகரில் உள்ள டி.சி.ஏ.திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
கூடலூா் நகராட்சி வாா்டு எண்: 1,2,3-க்கு கூடலூா், எல்.எப்.சாலை, எல்.ஐ.சி. சுருளிவேலு திருமண மண்டபத்திலும், ஓடைப்பட்டி பேரூராட்சி வாா்டு எண்: 1 முதல் 7 வரை உள்ள பகுதிகளுக்கு நந்தகோபால் அரங்கத்திலும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவில்பட்டி, குன்னூா் பகுதிகளுக்கு முத்தனம்பட்டி சிவசக்தி திருமண மண்டபத்திலும், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலூத்து, மயிலாடும்பாறை பகுதிகளுக்கு பி.எஸ்.ஜே திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.
சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசுத் துறைகளின் சேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம். கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு விடுபட்ட
தகுதியுள்ள பெண்கள் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.