எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!
போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது
கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிடம் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் சுரேஷ் (55) என்பதும், பிரான்சிஸ் மகன் ராஜன் என்பவருடன் சோ்ந்து போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தனா். தலைமறைவான ராஜனைத் தேடிவருகின்றனா்.