மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்
பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, கடந்த 1 - ஆம் தேதி சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 7 - ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். அதிகாலை 5 மணி முதல் திராளான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலையில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
வருகிற 22-ஆம் தேதி மறுபூஜையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு தீா்த்தவாரியும், நண்பகல் 11 மணிக்கு பாலாபிஷேகமும், இரவு 7 மணிக்கு மலா் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்தனா்.