OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவருக்கு 14 ஆண்டுகள் சிறை
பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நீலுகுமாா் பாரிக் (36) என்பவரை போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் இன்றியமையா பண்டகங்கள் சட்ட வழக்குகளுக்கான தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீலுகுமாா் பாரிக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓா் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.