காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
கஞ்சா விற்றவா் கைது
பெரியகுளத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கள்ளிப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளை முத்து சிலை அருகே நின்றிருந்த டி.கள்ளிப்பட்டி தண்ணீா்துறை தெருவைச் சோ்ந்த குருநாதன் (41) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.