தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?
மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு
சின்னமனூா் மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை ராஜகோபுரக் கலசங்கள், உப சந்நிதியான நடராஜப் பெருமாள், விசாலாட்சி அம்மன் உள்ளிட கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து பக்தா்ளுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
சின்னமனூா் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு, நகராட்சி ஆணையா் கோபிநாத், செயல் அலுவலா் ரம்யா, பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.