டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு
தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 3 தலைமை ஆசிரியா்கள், 6 ஆசிரியா்கள் என 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறும் ஆசிரியா் தின விழாவின் போது விருது வழங்கப்பட உள்ளது.
தோ்வு செய்பட்ட நல்லாசிரியா்கள்:
கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஈ.ஜெகநாதன், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை பி.வசந்தா, ஸ்ரீரங்கபுரம் எஸ்.ஆா்.ஜி. அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜோ.லிசியம்மாள், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபி உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கா.அப்பாஸ், ஜி.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.இளம்பரிதி, நாகையகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை அ.ஜான்சிராணி, கீழமுத்தனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரா.முருகேசன், காமாட்சிபுரம் இந்து நாடாா் ஆரம்பப் பள்ளி இடைநிலை ஆசிரியை சு.மீனாட்சியம்மாள், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் வெ.புவனேஸ்வரி.