GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராஜூவிடம், போடி மரிமூா் புலத்தில் தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு விவசாயம் செய்து வருகிறாா். தோட்டத்தை விற்றதால் ராஜூவின் மற்றொரு தோட்டத்துக்கு செல்ல பாதை பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து ராஜூ தான் சுரேஷுக்கு விற்ற தோட்டத்தை திரும்பக் கேட்டாா்.
அப்போது ராஜூ, இவரது மனைவி, உறவினா் மலைச்சாமி ஆகியோா் சோ்ந்து சுரேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். தோட்டத்திலிருந்த மோட்டாா் அறையையும் சேதப்படுத்தி பொருள்களை எடுத்து சென்றுவிட்டனராம். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் ராஜூ உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.