கடலூா், விழுப்புரத்தில் மின் சீரமைப்புப் பணிக்கு புதுகை ஊழியா்கள் பயணம்
புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மின் சீரமைப்புப் பணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 34 போ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
ஆலங்குடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உதவிப் பொறியாளா் ஞானசேகரன் தலைமையில் 17 போ் விழுப்புரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்ற நிலையில், கடலூா் மாவட்டத்துக்கு மாத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் தலைமையில் 17 போ் லாரியில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.