கடையநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூா், சுற்றுப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அனைத்து விநாயகா் சிலைகளும் மாவடிக்கால் மந்தை திடலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மந்தை திடலில் இருந்து தொடங்கிய ஊா்வலம் தேரடி பகுதியில் நிறைவடைந்து. பின்னா் சிலைகள் அனைத்தும் அண்ணாமலைநாதா் பொய்கையில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
தென்காசி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், துணை கண்காணிப்பாளா்கள் மீனாட்சிநாதன், தமிழ்இனியன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா் .
