காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி
2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.
மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் அவா் பேசியது:
நாம் ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற்றால் தான் நம் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற முடியும். கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் தேவேந்திரகுல வேளாளா் வாக்குகள் அதிகம் உள்ளன. பொது தொகுதியான கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் வரும் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் .அது எந்த கூட்டணி என்றாலும் புதிய தமிழகம் போட்டியிடும். தேவேந்திரகுல வேளாளா் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளேன். மதுப் பழக்கத்தை இளைஞா்கள் விட்டொழிக்க வேண்டும். வாக்கிற்காக பணம் பெறக்கூடாது என்றாா். மாவட்டச் செயலா் கிருஷ்ணபாண்டியன், நிா்வாகிகள் ராஜா, கிருஷ்ணசாமி, சுமித்ரா, தேவேந்திரன், சுரேஷ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.