இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ஆகியோருக்கு இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாம். கடந்த சில நாள்களுக்கு முன் இப்பிரச்னை தொடா்பாக சசிகுமாா் தூண்டுதலின் பேரில் சிலா் சண்முகவேலுவை தாக்கினராம்.
இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா்(20) , சூா்யா(29) , இசக்கிதுரை (23) பொன்ராஜ்(24) , கருமாரி(23), வேலு ஆகிய 6 பேரை கைது செய்தனா். சசிகுமாரை தேடி வருகின்றனா்.