டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்
செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். ஆங்கில இலக்கிய மன்றச் செயலா் ஆசிரியா் மைதிலி வாழ்த்திப் பேசினா். மாணவிகள் மேடை நாடகம், பேச்சுத் திறன், தனிநபா் நடிப்பு, பாடல் ஒப்பித்தல், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட இலக்கியம் சாா்ந்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினா். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை ஆசிரியா்கள் ஆயிஷா, கோமதி செய்திருந்தனா். மாணவிகள் சதாஸ்ரீ, செலினா வரவேற்றனா். ருமனா, பவித்ரா நன்றி கூறினா்.