"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம் மற்றும் மகாபூா்ணாஹுதி பூஜைகளுடன் 1 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.புதன்கிழமை காலை திரௌபதி அம்மன் - பரிவார மூா்த்திகளுக்கு மருந்து சாத்துதல் நிகழ்வும், 3 ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை 4 ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிந்ததும், காலை 7.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திரௌபதி அம்மன்- பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பிற்பகல் 12 மணியளவில் அன்னதானமும், மாலையில் திரௌபதியம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.