இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி
சாத்தான்குளம் அருகே செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாத்தான்குளம் அருகே நெடுங்குளம், கொம்பன் குளம், வேலவன் புதுக்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கனரக லாரிகளில் கல் மணல் , ஜல்லிகள், குண்டு கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நெடுங்குளம் கல்குவாரியிலிருந்து வந்த லாரி, அமுதுன்னாக்குடி குளத்துக்கரையில் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள சாலையோரத்தில் கவிழ்ந்தது.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. லாரி ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.
இதுகுறித்த தகவலறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடம் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்டனா்.