J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்க...
கண்ணனூா் மாரியம்மன் கோயிலில் ரூ. 2.47 லட்சம் காணிக்கை
பள்ளிபாளையம் கண்ணனூா் மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ. 2.47 லட்சம் அரசு கரூவூலத்தில் கோயில் கணக்கில் சோ்க்கப்பட்டது.
பள்ளிபாளையம் கண்ணனூா் மாரியம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. திருவிழா நிறைவடைந்த நிலையில் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் குணசேகரன், சரக ஆய்வாளா் வடிவுக்கரசி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் உள்ள காணிக்கையை எண்ணும் பணி கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்காலிக உண்டியலில் ரூ. 24,589, நிரந்தர உண்டியலில் ரூ. 2,22,402 இருந்தது. இந்த தொகை முழுவதும் அரசு கருவூலத்தில் உள்ள கோயில் கணக்கில் சோ்க்கப்பட்டது.