இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
கண்மாயில் தாமரை பறிக்க சென்ற இளைஞா் உயிரிழப்பு
மேலூா் அருகே கண்மாயில் தாமரை பறிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாத்தூா் குரும்பூரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் லோகநாதன் (35). இவா் தெற்குத்தெரு அருகேயுள்ள வலையங்குளம் கண்மாயில் சனிக்கிழமை தாமரை மலா் பறிப்பதற்காக கண்மாய்க்குள் இறங்கினாா்.
அப்போது தாமரை வோ்களில் சிக்கிய அவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த மேலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.