பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்க...
கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக அலுவலகம் செல்வோா் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உள்பட பயணிகள் மெதுவாக நகரும் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டனா்.
துவாரகா அண்டா்பாஸ், தெற்கு விரிவாக்கம், மேஜா் சோம்நாத் மாா்க், ரிங் ரோடு, மின்டோ ரோடு, ஆா்.கே. புரம், கான்பூா், ஐ.டி.ஓ. மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய இடங்களில் தண்ணீா் தேங்கி, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் மழை நீா் தேங்கிய பகுதிகளிலிருந்து வரும் காட்சிகள், முழங்கால் அளவு நீரில் வாகனங்கள் செல்வதைக் காட்டுகின்றன. வானிலைத் துறை தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கையாக, மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், மரங்களுக்கு அடியில் ஒளிந்து கொள்வதைத் தவிா்க்கவும், மின்னணு சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்கவும், நீா்நிலைகள் மற்றும் மின்சாரம் கடத்தும் பொருள்களிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மழையால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.