பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பஜன்புராவில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் கைது
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் பழைய பகை காரணமாக 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதற்காக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் வி. சுவாமி கூறியதாவது: கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஒரு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பதிவாகியது. அப்போது கபீா் நகரில் வசிக்கும் ஷாஹித் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா் விஜய் பாா்க் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டாா். உள்ளூா்வாசிகள் அவரை ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பஜன்புரா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்கள் ஏப்ரல் 29 அன்று கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவருடனான பழைய பகை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.