செய்திகள் :

கனிம ஒப்பந்தத்தில் அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

post image

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கனிம ஒப்பந்தம் கையொழுத்தாகிவிட்டது. தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பல மாறுதல்களுடன் இந்த ஒப்பந்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் புதிய வடிவில் முந்தைய வடிவங்களை விட உக்ரைனுக்கு அதிக பலன்களை அளிக்கக்கூடிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முந்தைய ஒப்பந்த வரைவுகளில் உக்ரைன் இரண்டாம் நிலை கூட்டாளியாக குறிப்பிடப்பட்டு, நாட்டின் இயறகை வளங்களில் அமெரிக்காவுக்கு இதுவரை இல்லாத அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நீண்ட கால உதவி கிடைக்கும் என்று உக்ரைன் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கியது. ஆனால் அவருக்குப் பிறகு அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா சென்றாா். ஆனால் வெள்ளை மாளிகையில் போா் தொடா்பாக டிரம்ப்புடன் காரசாரமான விவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே அவா் நாடு திரும்பினாா்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் தற்போது கையொப்பமாகியுள்ளது. எனினும், அந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்க... மேலும் பார்க்க

லஷ்கா் பயங்கரவாத தலைவா் ஹபீஸ் சையது பாதுகாப்பு அதிகரிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கை

இந்தியா மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சையதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கம... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத... மேலும் பார்க்க

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான ப... மேலும் பார்க்க

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நி... மேலும் பார்க்க

ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு... மேலும் பார்க்க