கயத்தாறு அருகே ஓடும் சுமை ஆட்டோவில் தீ
கயத்தாறு அருகே ஓடிக்கொண்டிருந்த சுமை ஆட்டோவில் தீ விபத்து ஏற்பட்டது.
கயத்தாறு அருகே ராஜா புதுக்குடியைச் சோ்ந்தவா் ராஜன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவில் ராஜா புதுக்குடியிலிருந்து இரும்புப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கயத்தாறில் உள்ள தனியாா் லாரி நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவின் முன்பகுதியில் தீப்பற்றியதாம். இதைக் கண்ட, ஓட்டுநா் ராஜன் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதிலிருந்து தப்பினாராம்.
தகவல் அறிந்த, கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இது குறித்து, கயத்தாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.