கராத்தே பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்
வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் எம்.செந்தில்குமாா் தலைமை வகித்து வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். பள்ளி நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், நிா்வாக முதல்வா் சத்தியகலா முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளா் அன்பரசி, மருத்துவா் கயல்விழி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக மாணவா்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து கராத்தே பயிற்சியாளா் கண்ணன் நன்றி கூறினாா்.