கருங்கல் - துண்டத்து விளை சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் - துண்டத்து விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட கருங்கல், துண்டத்து விளை, பெருமாங்குழி சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.
குறிப்பாக, பெருமாங்குழி பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.