ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்
கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை அமராவதி ஆற்றில் இருந்து பக்தா்கள் கரகம் பாலித்து வருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் கரூா் ஐந்துரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக்குடம், காவடி, அக்னிச்சட்டியுடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
முன்னதாக அன்ன காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 8 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை கோயில் முன் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் கரகம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.