மக்களுடன் முதல்வா் முகாமில் ரூ. 1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்
குளித்தலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெய்தலூா் ஊராட்சியில் இந்திரா நகா், புத்தூா் ஊராட்சியில் சின்னப்புதூா், வடசேரி ஊராட்சியில் காவல்காரன்பட்டி ஆதிதிராவிடா் காலனி, பொருந்தலூா் ஊராட்சியில் தெலுங்கப்பட்டி எஸ்சி காலனி மற்றும் கழூகூா் ஊராட்சியில் கழூகூா் ஆகிய 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் முன்னிலை வகித்தாா். முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமை வகித்து, வருவாய்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், ஊரக வளா்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா்(பொறுப்பு) கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சக்தி பாலகங்காதரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், பிற்படுத்தப்பட்டோா் நலஅலுவலா் இளங்கோ, குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.