பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
தெருவின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு கலைவாணா் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த தெருவின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிதிவண்டியில் செல்லும் போது தடுமாறி கீழே விழுகின்றனா்.
ஆகவே, மின் கம்பத்தை தெருவின் ஓரப்பகுதியில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.