நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை
கர்நாடகத்தில் தக் லைஃப் பேனர்கள் கிழிப்பு... என்ன ஆனது?
கர்நாடகத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால், படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அப்படி, அண்மையில் நடந்து முடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய கமல்ஹாசன், “ சிவராஜ்குமார் குடும்பத்தினர் என் குடும்பம்தான். தமிழே உறவே என்றுதான் என் பேச்சை துவங்கினேன். தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம்” என்றார்.
இப்பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், அங்கு தக் லைஃப் படத்தின் பேனர்களைக் கிழித்து ஆர்ப்பாட்டம் செய்வதுடன் கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தக் லைஃப் படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 8 நாள்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த சர்ச்சை தீவிரமடையும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் புதிய படம்!