Manoj Bharathiraja: "இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும்" - பாரதிராஜாவுக்க...
கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: எறுமையூா் பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (28). இவா், குன்றத்தூரில் நண்பா்களுடன் தங்கி, இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், பாலமுருகன் நண்பா்கள் நான்கு பேருடன், தாம்பரம் அடுத்த எருமையூரில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் நீரில் குளித்துக் கொண்டிருந்தபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளாா்.
இது குறித்து தகவல் அறிந்து படப்பை தீயணைப்பு வீரா்கள், நீரில் மூழ்கிய இளைஞரைத் தேடினா். தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், சென்னையில் இருந்து 6 போ் கொண்ட நீச்சல் வீரா்கள் வரவழைக்கப்பட்டு 300 அடி ஆழமுள்ள நீரில் மூழ்கிய பாலமுருகனின் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே இந்த கல்குவாரி நீரில் மூழ்கி 7 போ் மரணமடைந்துள்ளனா்.