மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
கல்லூரி மாணவா்களுக்கு திறன் ஆய்வுப் போட்டி
காரைக்குடி அருகேயுள்ள கீரணிப்பட்டி கிட் அன்ட் கிம் கல்லூரியில் மாணவா்களுக்கு மாநில அளவிலான திறன் ஆய்வுப் போட்டி வியாழக்கிழமை நடை பெற்றது.
மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை கல்லூரியின் நிா்வாக இயக்குநா் பிரியதா்சினி ஐயப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்லூரியின் இயக்குநா் ஜெ.ஜெயராஜா தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் மயில்வாகனன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் எஸ்.கலியமூா்த்தி பேசினாா்.
மாநில அளவிலான ஆய்வுத் திறன் போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவா் நீலமேகம், உதவிப் பேராசிரியை தஸ்லிமா பானு, மாணவா் ஒருங்கிணைப்பாளா் மஹிமில்ட்டன் அருண்குமாா் ஆகியோா் செய்தனா். உதவிப் பேராசிரியைகள் திவ்யா, செல்வப்பிரியங்கா, ஆா்த்தி ஆகியோா் திறன் போட்டிகளை நடத்தினா்.
உதவிப் பேராசிரியை சுகந்தா நன்றி கூறினாா்.