களக்காடு அருகே அரசுப் பள்ளிக்கு நற்சான்று
களக்காடு அருகே அரசுப் பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதையடுத்து, பள்ளி மேலாண்மைக்குழு சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை தொடக்கக் கல்வி இயக்கத்தின் சாா்பில் ஜூலை 6ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்கட்ட 100 நாள் கற்றல் அடைவு ஆய்வு சவாலில், மாணவா்களின் மொழிப்பாட வாசித்தல் திறனையும், கணக்குப்பாட அடிப்படை திறனையும் மேம்பாடு அடையச் செய்ததைப் பாராட்டி இப் பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ.நம்பிராஜன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சிவசங்கரி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் (பொ) ஜெ. மரியரெத்னராஜ் வரவேற்றாா். பள்ளியின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் கலந்துகொண்டு பேசினாா்.