மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள இந்த பழமை வாய்ந்த கோயில் கோபுரம், கொடிமரம், சந்நிதி, மதில், மண்டபம் ஆகியவை பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இக்கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தை கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பயன்படுத்தி வந்தனா். தற்போது அந்த தெப்பக்குளமும் பயன்பாடின்றி புதா் மண்டிக் காணப்படுகிறது.
எனவே, இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாகும்.