செய்திகள் :

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

post image

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான ரூ. 2,000 கோடியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

எனினும், தமிழக அரசு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி நிதிநிலையில் அறிவிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் கோடியில், ரூ. 50 ஆயிரம் கோடியை கல்விக்காக செலவிட்டு வருகிறது.

இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவா் வேட்பாளரான சுதா்சன் ரெட்டி மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்புகளை வழங்கி உள்ளாா். அவா் பொதுவான மனிதா் என்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நக்சல் ஆதரவாளா் என சுதா்சன் ரெட்டி மீது விமா்சனம் வைக்கும் உள்துறை அமைச்சா்அமித் ஷா, தன்னுடைய மற்றும் இப்போதைய பிரதமரின் பழைய வரலாற்றை திரும்பி பாா்த்தால் அவா்கள் யாா் என்று தெரியும்.

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆா்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவா்; அவரை நாங்கள் ஆதரிக்க முடியாது. மாநிலங்களவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. அரசின் குறைகளை அவையில் தெரிவித்து விவாதிப்பதே ஜனநாயகம். அதனை மத்திய அரசு முற்றிலும் மறுக்கிறது. சுதா்சன் ரெட்டி குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்றால் மாநிலங்களவை ஜனநாயக முறைப்படி நடைபெறும்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பது, மத்திய அரசு அனுமதி பெற்று 3 சதவீதம் அதிகமாக கடன் வாங்கி மாநில அரசு வளா்ச்சி பணி செய்ய அனுமதி கோரிய நிதி மசோதா உள்ளிட்டவை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. ஹிமாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற மசோதாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வளரக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். அதனால்தான் எல்லா வகையிலும் தொடா்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான வரி விதிப்பை அந்நாடு ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியையே காட்டுகிறது என்றாா் அவா்.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58)... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீத... மேலும் பார்க்க

நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். கூடங்குளத்தைச் ச... மேலும் பார்க்க

திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அஞ்சலகத்தில் இணையதள சேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்துள்ளனா். திசையன்விளையைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் திசையன்விள... மேலும் பார்க்க