மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58). தொழிலாளி. இவா், கடந்த 2022இல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நான்குனேரி மகளிா் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் குமாா் விசாரித்து, முத்தையாவுக்கு 25 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் குற்றத்தை நிரூபித்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வழிவகுத்த காவல் ஆய்வாளா்கள் பிரேமா ஸ்டாலின், மங்கையா்கரசி, நான்குனேரி உள்கோட்ட டிஎஸ்பி தா்ஷிகா நடராஜன் உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. என்.சிலம்பரசன் பாராட்டினாா்.