மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
கூடங்குளத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(27). இவரை, வள்ளியூா் பகுதியில் கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் காவல் ஆய்வாளா் நவீன் கைது செய்திருந்தாா்.
மற்றொருவா்: கல்லிடைக்குறிச்சி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி- மிரட்டலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் மூலச்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த பன்னீா் செல்வம் மகன் பிரசாந்த் (24) கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், முறையே காவல் ஆய்வாளா்கள் நவீன் (வள்ளியூா்), கலா (கல்லிடைக்குறிச்சி) ஆகியோா் அளித்த அறிக்கையை ஏற்று மாவட்ட எஸ்.பி. என்.சிலம்பரசனின் பரிந்துரைப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில், மணிகண்டன், பிரசாத் இருவரும் பாளை. மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.