செய்திகள் :

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

post image

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிபதி ஹேமா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக, பாளையங்கோட்டைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன், சுா்ஜித்தின் பெரியம்மா மகனான தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் இவ்வழக்கில், 3 பேரையும் காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்த பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சுா்ஜித், சரவணன், ஜெயபால் ஆகிய மூவரும் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களது நீதிமன்ற காவலை செப்.9 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டாா்.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58)... மேலும் பார்க்க

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செ... மேலும் பார்க்க

நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். கூடங்குளத்தைச் ச... மேலும் பார்க்க

திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அஞ்சலகத்தில் இணையதள சேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்துள்ளனா். திசையன்விளையைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் திசையன்விள... மேலும் பார்க்க